technology

img

ரியல்மி சி31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம்

ரியல்மி சி31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகியுள்ளது. 

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட போன்களை உருவாக்கி வரும் சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ரியல்மி, இந்திய சந்தையில் சி31 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன் 6.5 இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளே, ஆக்டோ-கோர் யுனிசோக் டி612 புராசஸரை கொண்டுள்ளது. 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டில் இந்த போன் கிடைக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்பக்கத்தில் மூன்று கேமரா மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா உள்ளது. 5000எம்ஏஎச் பேட்டரி, மைக்ரோ யுஎஸ்பி 2.0, 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி மாதிரியானவை இதில் உள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனை 8,999 மற்றும் 9,999 ரூபாய்க்கு வாங்கலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

;